விட்டில் பூச்சி போல்
வெளிச்சம் என்று நினைத்து
விளக்கில் வீழ்ந்து மடியும்....
கடற்கரையோரம்
கால் பாதங்கள்
தேடி நடக்கும்.....
நிழலை நிஜம்
என்று கருதி
கனவுக்குள்
கூடு கட்டும்...
மொத்தத்தில்
ஒன்றை மற்றும்
மறந்து விடும்.....
வாழ்க்கை
உடைந்து
வீழக்
காத்து நிற்கும்
ஓடு பாத்திரம் என்பதை ????