துணிகளை உலர வைப்பதற்காக எனை ஏன்தலை கீழாக கட்டி
தொங்க விடுகிறாய் பெண்ணே.
போன ஜென்மத்தில் உன்னை
காதலித்த பாவத்திற்கு
இந்த ஜென்மத்தில்
இப்படி ஒரு தண்டனையா????
இன்னும் உனக்கு போதவில்லையா????
(ஹேமா அவர்களின் பின்னூட்டக் கவிதை சிறப்பாக இருப்பதால் பதிவுடன் இணைக்கிறேன்)
அன்பே பார்த்தாயா
ஒன்றுக்கும் உதவாதவன் என்பாயே
இதற்காகவாவது...!
இது தண்டணை அல்ல
உனக்கு உதவ
இதன் வழி மட்டுமே
நீ எனக்கு!
வரமாய் தந்துவிடு
வாழ்வு முழுதுமே
தலைகீழாய் தொங்க என்று!!!







