
திரு சாரு, திரு ஜெ
இணையத்தில் இப்போது இவர்களைப்பற்றி வார்த்தைகள் நிறைந்து நிற்கிறது.
இருவரையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசிப்பழக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இருவரின் ஏராளமான படைப்புகளை படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.
எதற்காக இவர் தம்மில் இவ்வளவு இடைவெளி என்று புரியவில்லை.
இருவருமே பரஸ்பரம் நேராக யாரையும் குற்றம் சுமத்துவதாகத் தெரியவில்லை.
இருவரின் இணையத்தளங்களையும் தவறாமல் நேசித்து வாசிப்பவன் நான்.

இப்போது காரணம் புரிகிறது.
இவர்களை தீவிரமாக நேசிக்கும் வாசகர்கள் இவர்கள் மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, 'உங்களைப்பற்றி இவர் அப்படி எழுதியிருக்கிறார், அவர் இப்படி எழுதியிருக்கிறார்' என்று கடிதம் எழுத, பதில் எழுதும் விருப்பம் இல்லையென்றாலும், இவர்கள் எழுத தூண்டப்படுகிறார்கள்.

நல்ல ஒரு நண்பன் எதிரியாக மாறும் போது, நாம் எதிர்கொள்ளும் இடறுகள் நமக்கே புரியும். இதுவும் அதே கதைதான்.
நண்பனின் பலவீனம் நண்பனுக்கே நன்றாகத் தெரியும். இது போதாதா????
அது போல் சில பதிவர் சந்திப்புகள்..... படிக்க நேர்ந்தது.
ஒன்றாக இருந்து தண்ணியடித்தால், போலி பெயரில் எழுவது, அல்லரை சில்லறை பலவீனம், ஆள் பார்க்க குண்டாக, தொப்பையாக இருப்பது, இதுபோல் இன்னும் பல, அனைத்தையும் வலையில் போட்டு உடைக்கின்றார்கள்.
இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். இதுக்கு அது எதிர் பதிவு என்று நமக்கு படிக்க விஷயங்கள் கிடைக்கின்றது.

கலிகாலத்தில் நட்பைக்கூட 'பொத்தி பொத்தி' பாதுகாக்க வேண்டிய கட்டாயம்.
சாரம்: ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்.
இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது.
ஆனால் ஒரு பழமொழி நினைவுக்கு வருகின்றது.
*** வேலில போற பாம்ப எடுத்து தோளில் போட்ட கதை....:-)
*** ஏதோ மனதில் தோன்றியது, எழுதி விட்டேன். அவ்வளவுதான்.
*** உள்குத்து, வெளிகுத்து ஒன்றும் கிடையாது.
தொடர்புடையவை:
திரு சாரு ஜெயா தொலைக்காட்சியில்
திரு சாருவின் வலைப்பதிவு
திரு ஜெயமோகன் வலைப்பதிவு