நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடலின் போது கேட்டது.
"சில வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் நடந்த ஒரு சம்பவம்.
காலையில் 'கல்ப் நியூஸ்' தினசரியை திறந்ததும், முதல் பக்கத்தில் செய்தி.
நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது. திரைப்படங்களில் கூட
நாம் இந்த மாதிரி நிகழ்வுகளை கண்டிருக்க மாட்டோம்.
படித்தவுடன் என்னை அறியாமல் மனது கனத்து விட்டது.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஒரு சவுதி குடும்பம்.
நான்கு ஆண் குழந்தைகள். வயது முறையே ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் எட்டு மாத கைக்குழந்தை.
நான்கு ஆண் குழந்தைகள். வயது முறையே ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் எட்டு மாத கைக்குழந்தை.
மூன்று குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தார்கள். சிறிய தகராறு.
ஒருவருக்கொருவர் அடித்து கொண்டார்கள். இரண்டாவது பையன் கோபத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து, சமையலறைக்குள் ஓடினான். திரும்பி வரும்போது கையில் கத்தி.
மூத்தவனை ஒரே குத்து. ரத்த வெள்ளம். பாத் ரூமில் டப்பில், கைக் குழந்தையை குளிப்பாட்டி கொண்டிருந்த அம்மா, அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்தவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
ஒரு மகன் இறந்து விட்டான். இளையவன் கையில் கத்தியுடன் பயத்தில் ஒரே ஓட்டம் ஓடியவன், பால்கனி வழியாக நான்காவது மாடியில் இருந்து குதித்து நடை பாதையில் விழுந்து சிதைந்து விட்டான். மூன்றாவது மகன் அலறி பயத்தில் கத்திக்கொண்டே மாடிப்படிகளின் வழியாக ஓட, தாயும் துரத்திக்கொண்டே ஓடியிருக்கிறார்.
வெளியில் வந்தவன் சாலைக்குள் புகுந்து ஓட, வேகமாக வந்த ஒரு டிரக் அடித்து தூக்கிஎறிந்து விட்டது. ஐந்து நிமிட இடைவேளையில் மூன்று குழந்தைகளின் உயிரிழப்பு. அந்த பெண் சாலையிலேயே மயக்கமுற்று விழுந்து விட்டார்.
போலீஸ் வந்து, வழக்கமான விசாரணை, சோதனை. வீட்டில் நோக்கியபோது, கை குழந்தையை குளிப்பாட்டி கொண்டிருந்தவர், பதட்டத்தில் குழந்தையை பாத் டப்பிலேயே விட்டு விட்டு வந்து விட்டார். தண்ணீர் நிறைந்து குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டது. நான்கு குழந்தைகளின் அகால மரணம் சில நிமிடங்களில்....
இது ஒரு துக்கமான நிகழ்ச்சிதான். ஆனால், நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பயங்கரம்.
பொதுவாக இங்கு வளைகுடா நாடுகளில், குழந்தை பிறப்பு விகிதம் அதிகம்.
எல்லாவருக்கும் குறைந்தது ஐந்து முதல் பத்து குழந்தைகள் காணும்.
குடும்பக் கட்டுப்பாடு கிடையாது.
எல்லாவருக்கும் குறைந்தது ஐந்து முதல் பத்து குழந்தைகள் காணும்.
குடும்பக் கட்டுப்பாடு கிடையாது.
பாசம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் நம்மைப்போல் இல்லை.
இங்கு குழந்தைகள் அழுதாலும், சண்டை போட்டாலும், நம்மைப்போல் யாரும் அவ்வளவு சீரியஸ் ஆக கண்டு கொள்ள மாட்டார்கள்.
அது போல் சில சிறுவர்கள் சாலை ஓரங்களில் ஓடி பிடித்து விளையாடுவதை பார்க்கும்போது நமக்கே பயமாக இருக்கும்.
சாலையில் அழும் குழந்தைகளை தர தரவென்று இழுத்துக்கொண்டு செல்லும் தாய்மார்களை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
கார் பார்கிங்கில் நிறுத்திய வாகனம், காலையில் வந்து பார்க்கும்போது, கண்ணாடி உடையாமல் இருந்தால் அது நம் அதிர்ஷ்டம். கால் பந்து விளையாடும் சிறுவர்கள் வாகனங்களை சேதப்படுத்தி விட்டு ஓடி விடுவார்கள்.
இதை எல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம்,
குடும்பம், கலாச்சாரம், பந்தம், பாசம், நட்பு, காதல், பெரியவர்களை,
பெற்றோர்களை மதித்தல் இதுபோல் இன்னும் பல.... மனதால்
மனிதனை இணைக்கும் எத்தனையோ நல்லவைகள், இவை
எல்லாவற்றிலும் நாமே முன்னில்.....
நினைக்கும் போதே பெருமையாக இருக்கின்றது.
பெற்றோர்களை மதித்தல் இதுபோல் இன்னும் பல.... மனதால்
மனிதனை இணைக்கும் எத்தனையோ நல்லவைகள், இவை
எல்லாவற்றிலும் நாமே முன்னில்.....
நினைக்கும் போதே பெருமையாக இருக்கின்றது.
அக்கரைக்கு இக்கரை பச்சை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்....
இதுபோல்,
நிழலின் அருமை வெயிலில் தெரியும்....
இதுபோல்,
இந்தியாவின் மதிப்பு இந்தியாவில் இருக்கும் போது நமக்கு தெரியாது.
அயல் நாடுகளில் இருக்கும்போதுதான் நன்றாக தெரியும், புரியும்.
அயல் நாடுகளில் இருக்கும்போதுதான் நன்றாக தெரியும், புரியும்.