படைப்புகள் நாம் மட்டும் படிப்பதற்கு அல்ல....
நான்கு பேர் படித்து நல்லது கெட்டது கூறும்போதுதான், நமக்கு ஒரு
திருப்தியே வரும்.
நம்மையும் விரும்பி 'பின்பற்றி' ஊக்கமும், உணர்வும் கூடவே உற்சாகமும் தரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது.
நட்புடன் ஜமால் - இவரை பற்றி பதிவுலகத்தில் அறியாதவர்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம். முதல் பதிவு விளையாட்டாக நான் வெளியிட்டேன். அடுத்த சில நிமிடங்களில் 'முதல் பதிவா' என்றொரு குசல விசாரிப்பு. புதியவர்களை ஊக்குவிப்பது, நாகரீகமாக பின்னூட்டம் இடுவது, பயனுள்ள பதிவுகள் வெளியிடுவது, இதுபோல் இவரிடம் இருந்து நாம் கற்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றது. இவருக்கு வரும் பின்னூட்ட மழையே போதும் இவரைப்பற்றி சொல்வதற்கு. இவர் நான்கு வரியில் ஒரு கவிதை எழுதினால் குறைந்தது நானூறு பின்னூட்டங்கள் வரும். இந்த பதிவை பாருங்கள்.
ஜீவன் இவரது புதிய பிளாக்கின் வடிவமைப்பு, கண்ணுக்கு அழகு. பயனுள்ள பல நல்ல பதிவுகளை வெளியிட்டு கொண்டிருப்பவர். சென்ற முறை அவரது பதிவை பார்த்த போது ஒரு கவிதை இருந்தது. நான்கு வரிகளில் மனதை உருக்கி விட்டது. அதை இங்கு பாருங்கள்.
ஜாபர் : பங்கு சந்தை பற்றிய பல பயனுள்ள தகவல்களை தினம் தினம் தந்து கொண்டிருப்பவர். எல்லாமே அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்டவை. இவரது பதிவுகளை தினம் பார்த்தோம் என்றால், பங்கு சந்தையில் நமது முதலீடுகள் பாதுகாப்பாக இருப்பதற்கான அனைத்து உபயோகமான தகவல்களும் கிடைக்கும்.
ராத் மாதவ்: இதைப்பற்றி சொல்லவே தேவை இல்லை. வயதை கூட இருபத்தி மூணே முக்கால் என்று சொல்பவர். நம்ப முடியாத நகைச்சுவை அனுபவங்கள். இங்கு வந்தால் கவலை மறந்து சிரிக்கலாம். நல்ல பையன். சமீபத்திய ஒருமொக்கை பதிவு.
சம்பத் குமார்: இவரது 'தமிழ் வெப் தகவல் தளத்தில், இணையம், கணினி, மற்றும் வன்பொருள், மென்பொருள் பற்றிய அனைத்து பயனுள்ள தகவல்களும் கிடைக்கும். இதைப் பாருங்கள்.
வடிவேலன் ஆர் : கணினி பற்றி தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படி இலகுவான நடையில் மிகப் பயனுள்ள தகவல்களை திரட்டி தருபவர். இங்கு பாருங்கள்.
வால் பையன் : யதார்த்த நிகழ்வுகளை நகைச்சுவையோடு வெளியிடுவதில் இவருக்கு நிகர் இவர் தான். பிரபலமானவர். இவரை பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. பூக்கடைக்கு விளம்பரமா? அண்மையில் ஒரு மொக்கை கவிதை வெளியிட்டிருந்தார். ஆஹா.... மொக்கை என்றால் இதுதான்.
மது கிருஷ்ணா: இவரது பதிவுகள் படிக்கும்போது மனதை மயில் இறகு கொண்டுதாலாட்டும் உணர்வு வரும். இதோ இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.
அருண் : தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் கலக்குபவர். கூடவே தமிழ் கவிதைகளும் சிறப்பாக எழுதுபவர். இவருக்கு மொத்தம் மூன்று பிரதி பிம்பங்கள். லேன்ஷ்லாட், சிலுவை, யு நோ பூ..... மூன்றும் வித்தியாசமான நிஜங்கள்.மொத்தத்தில் ஒரு மூவேந்தர் கலக்கல். இவரது ஒரு கலக்கல் பதிவு இதோ இங்கே.
துர்கா ஸ்ரீ கனகா : இறையன்பும், நெறி ஒழுக்கமும் கொண்ட மிகச்சிறந்த படைப்புகள். நமக்கு அற்புதம் வரும். ஒரு சிறுமி, இந்த இள வயதில் இப்படிப்பட்ட பதிவுகள் வெளியிடுவதை காணும்போது. சிறு உதாரணம் இங்கே.
தமிழ் தோழி: இவரது சிறப்பம்சமே இவர் வெளியிடும் கவிதைகளும் அதற்கு மிகப்பொருத்தமான புகைப்படங்களும். எனக்கு மிகவும் பிடித்த இந்த கவிதையை படித்துப்பாருங்கள்.
ஷேன் நல்லையா தமிழர்களுக்கு உதவும் பல நல்ல பிளாக்குகள் இவருக்கு உள்ளது. சிறந்த பத்திரிக்கையாளர். இதோ இந்தப் பதிவை பாருங்கள்.
விஸ்வநாத்: தேடிப்பார்த்தேன். இவர் இன்னமும் பிளாக் தொடங்கவில்லை. எனவே தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.
ராம் சி எம் : கவிதைகள், சமூக நிகழ்வுகள் இவரது சிறப்பு. அடிச்சாச்சு சதம் என்று நூறு பழமொழிகளை போட்டு அசத்தியவர்.
ராஜ்குமார் குவைத்: வளைகுடா நாடுகளில் வேலைக்காக சென்று பரிதவிக்கும் நம்மவர்களின் துயர் நிலை பற்றி இவர் எழுதிய இந்த பதிவை பாருங்கள்.
தியா: சிறு வயதில் இவர் எழுதும் கவிதைகளும் மற்ற பதிவுகளும் மிக அழகாக இருக்கும். குறிப்பாக பொருத்தமான புகைப்படங்கள். இங்கே பாருங்கள்.
வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களை பின்பற்றுபவர்களை நீங்களும் பின்பற்றி பரஸ்பரம் பெருமை சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு மிக சிறந்த உதாரணமாக திரு ஜமால் மற்றும் திரு வால் பையன் இருவரையும் கூறலாம்.










